எம். ஆர். டி நிலையத்திற்கு அருகில் இருக்கும் கடைத்தொகுதி அது. அங்கே இருந்த கடை ஒன்றில் சட்டைகளைப் பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தேன். அப்போது அந்தப் பக்கமாக ஒரு வயதான பெண்மணி.... baju kurung அணிந்திருந்தார். என் அம்மாவின் வயதிருக்கும். நடையில் முதுமை தெரிந்தது.
என்னைத் தாண்டும் போது, கையிலிருந்த டிஷ்யூக்களை நீட்டி, இளைத்த குரலில் த்ரீ ஃபார் ஒன் டாலர், த்ரீ பார் ஒன் டாலர் என்றார். அவ்வார்த்தைகள் அவருக்கே இன்னும் பழக்கமாகியிருக்கவில்லை என்பதை அவர் குரலில் இருந்த தடுமாற்றம் உணர்த்தியது. மனதுள் பாறையாய் இறங்கியது அவரது இரைஞ்சல்.
வாங்க நினைத்த பொருளைப் பற்றி சுத்தமாய் மறந்து திகைத்து நின்ற சில நொடிகளில், நான் டிஷ்யூவை வாங்கப் போவதில்லை என்று முடிவு செய்தவர் போல தள்ளாட்டத்துடன், வேறு பக்கம் செல்லத் துவங்கினார்.
சில கணங்கள் அவரது நம்பிக்கை அலைகழிய காரணமாய் இருந்து விட்டேன் என்ற குற்றவுணர்வு நெருக்க, அவரைத் தொடர்ந்து சென்று, என்னால் இயன்ற வெள்ளிகளைக் கொடுத்தேன்.
நடுங்கும் கரங்கள் நீட்டிய டிஷ்யூ பேக்கட்களை மென்மையாய் மறுத்து எதிர் பக்கம் நடக்கத் துவங்கினேன். அவரது தேங்க்யூ என்னைத் துரத்தி வந்தது. அதைக் எதிர் நோக்க அஞ்சியோ என்னவோ, என் நடை துரிதப்பட்டிருந்தது.

9 கருத்துகள்:
வயதான காலத்திலும் உழைத்து உண்ணும் தன்மானம் மனம் சிலிர்க்கிறது.
பெரிய எண்ணம் கொண்டவர்கள், வாழ்வு தாழ்ந்தாலும் பெரிய எண்ணம் கொண்டவர்கள்தான். (சட் என்று தவறுதலா 3 இடுகைகளை ஒரேயடியா பப்ளிஷ் பண்ணிட்டீங்களா? உங்களுடைய இடுகை மெதுவான்னா வரும்?)
முதுமையிலும் உழைத்தால்தான் உணவு என்பது மிகக் கொடுமையானது. சிங்கையில் கூன்விழுந்த சீன மூதாட்டி ஒருவர் வண்டியில் அட்டைப் பெட்டிகளை வைத்துக்கொண்டு சாலையைக் கடக்க முயன்றார். நான் அவரிடம், உங்களுக்கு உதவி செய்யலாமா? என்று கேட்டேன் . இது என் அன்றாடப் பிரச்சினை, நீ என்ன செய்துவிட முடியும்? என்று கூறி மறுத்துவிட்டார். இன்றும் என்னால் அதை மறக்க முடியவில்லை.
மனப்பாரம் அபிகரித்த து!
ரொம்ப நாளா போடனும்னு வச்சிருந்து, இன்றைக்கு போட்டேன்.
கருத்துகளுக்கு மிக்க நன்றி மாதேவி,நெல்லை தமிழன், அய்யாபுரம் கனி, புலவர் இராமாநுசம்.
முக நூலில் படித்தேனோ?
ஆமாம். அங்கே சீக்கிரம் தொலைந்து போகிறது என்று இங்கே மறுபடியும்...
உருக்கும் வரிகள்.
கருத்துரையிடுக