புதன், 3 அக்டோபர், 2012

55- வார்த்தை கதை (வேலைச் சுமை)

 
இவற்றைப் பற்றிய அறிமுகம் சுஜாதா எழுதிய 'சிறு சிறு கதைகள்' என்ற புத்தகத்திலிருந்து கிடைத்தது. மொத்தம் 55- வார்த்தைகளில் கதை இருக்க வேண்டும். இது தான் முக்கிய விதி!

மற்ற விதிமுறைகள்:

1. கதையின் தலைப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. ஆனால் அதுவும் ஏழு வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2. எண்களும் கணக்கில் உண்டு 45, 500, 3458 போன்றவையெல்லாம் வார்த்தைகளே!

3. நிறுத்தக் குறிகள் (பஞ்சுவேஷன்ஸ்)வார்த்தைகளாக எடுத்துக் கொள்ளப்படாது.


சுஜாதாவின் வரிகள் மீண்டும் இங்கே -

‘55 வார்த்தைக் கதை எழுதுவதில் ஒரே ஒரு சௌகரியம் . தினம் ஒரு 55-கதை எழுதலாம். ஏதாவது ஒன்று தேறும், 365 மோசமான 55-கதைகளை யாராலும் எழுத முடியாது.’

என்னுடைய 55-கதை முயற்சி, என் மற்றொரு வலைபக்கமான
http://rithikadarshini.blogspot.com  ல் எழுதியது  
மறுபதிவாய்  இங்கே . . .



வேலைச் சுமை


சுந்தரேஸ்வரன் தன் ‘டை'யைத் தளர்த்திக் கொண்டார். இவருக்காக வெளியே பலர் காத்திருந்தனர். இவர் புகழ் பாடவும், குறைகளை முறையிடவும் வந்திருந்தவர்களைப் பார்க்க சலிப்பாய் இருந்தது. தனக்கிருக்கும் வேலைச் சுமைக்கு, இரண்டு யுகங்களாவது விடுமுறை தேவையென அவருக்குப் பட்டது.

இப்போது நேரமாகிவிட்டது. வாசலில் இருந்தவர்களை விலக்கி, அவசரமாய் வெளியேறினார். மதுரையின் குறுகிய தெருக்களை அதிவேகமாய் தன் வாகனத்தில் கடந்து, கோயிலின் உள்ளே சென்றார். தீபாராதனை காட்டப்பட்டது.

அதனை ஏற்றுக் கொண்டு அனைவரையும் ஆசீர்வதித்த சுந்தரேஸ்வரனின் கழுத்திலிருந்த ‘டை’ நெளிந்தது.

7 கருத்துகள்:

குட்டன்ஜி சொன்னது…

வச்சீங்களே ஒரு பன்ச் கடைசி வரில!சூப்பர்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஹேமா அவர்களுக்கு,

நல்ல முயற்சி... நானும் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்... என்னால் முடியுமா...? சிறப்பான செயலுக்கு என்ன தேவை ? என்னும் பதிவில், என்னைப் பொறுத்தவரை திட்டமிடுதலே என்று சொல்லி இருந்தேனே... திட்டமிட்டு செய்தால் 55 வார்த்தை கதை - இதை செய்ய முடியுமே... என் பதிவுகளே நீளமாக எழுதி பிறகு சுருக்குகிறேனே... என்ன செய்வது...? ஏனிந்த குழப்பம்...? சொல்லி விட வேண்டியது தான்... இந்தப் பதிவிலேயே ஒரு வரி...

வேலைச் சுமை

53 ஹிஹி... நன்றி...

வெற்றிவேல் சொன்னது…

புது முயற்சி... அருமை

அப்பாதுரை சொன்னது…

nice

ஸ்ரீராம். சொன்னது…

அருமை. முன்னர் படித்த நினைவில்லை.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கழுத்திலிருந்த ‘டை’ நெளிந்தது.

சிவ சிவ !!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/3.html) சென்று பார்க்கலாம்...

நன்றி...